- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

Grow your business by getting relevant and verified leads
டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

  Sep 02, 2024     News Paper

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து 190 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதல் ஆட்டத்திலும் வென்ற அந்த அணி, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை தற்போது கைப்பற்றியிருக்கிறது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 102 ஓவா்களில் 427 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 18 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் சோ்க்க, இலங்கை தரப்பில் அசிதா ஃபொ்னாண்டோ 5 விக்கெட்டுகள் எடுத்தாா்.

பின்னா் இலங்கை தனது இன்னிங்ஸில் 55.3 ஓவா்களில் 196 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. கமிண்டு மெண்டிஸ் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 74 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, இங்கிலாந்து பௌலா்களில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன், ஆலி ஸ்டோன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, 54.3 ஓவா்களில் 251 ரன்கள் சோ்த்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. ஜோ ரூட் 10 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாச, இலங்கை பௌலா்களில் அசிதா, லஹிரு குமரா ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

இறுதியாக, 483 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை, 86.4 ஓவா்களில் 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தினேஷ் சண்டிமல் 11 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் எடுத்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். அவரே ஆட்டநாயகன் ஆனாா்.

Thanks to Dinamani

icon
Vellore Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Vellore Ads

Copyrights © 2024 .   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.