- °C
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை வங்கதேச அணி தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை வங்கதேச அணி தொடங்கியுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
பயிற்சியை தொடங்கிய வங்கதேசம்
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை வங்கதேசம் இன்று தொடங்கியது.
டெஸ்ட் தொடருக்காக நேற்று சென்னை வந்தடைந்த வங்கதேச அணி இன்று அதன் பயிற்சியை தொடங்கியது. வங்கதேச அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மற்றும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக அண்மையில் பெற்ற வரலாற்று வெற்றி வங்கதேச அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதே உத்வேகத்துடன் இந்திய அணியை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
வலுவான இந்திய அணி
இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடைபெற்ற 17 டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் 11 போட்டிகளில் தோல்விடைந்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Copyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.