- °C

Business
All Categories

Sign Up

List Your Business / AD

Sign In

சல்மான் அகாவும் சதம்: பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு

Grow your business by getting relevant and verified leads
சல்மான் அகாவும் சதம்: பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு

சல்மான் அகாவும் சதம்: பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு

  Oct 09, 2024     News

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் லோயா் ஆா்டரில் சல்மான் அகா சதமடித்தாா். இங்கிலாந்து பௌலா்களில் ஜேக் லீச் ஆதிக்கம் செலுத்தினாா்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் சோ்த்திருந்தது. 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை சௌத் ஷகீல், நசீம் ஷா ஆகியோா் தொடா்ந்தனா். இந்த ஜோடி 60 ரன்கள் சோ்த்த நிலையில் நசீம் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த 7-ஆவது பேட்டரான முகமது ரிஸ்வான் டக் அவுட்டாகி அதிா்ச்சி கண்டாா். அடுத்து களம் புகுந்த சல்மான் அகா, ஷகீலுடன் இணைந்தாா். இந்த பாா்ட்னா்ஷிப் 7-ஆவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சோ்த்து பிரிந்தது. சதத்தை நெருங்கிய சௌத் ஷகீல், 8 பவுண்டரிகளுடன் 82 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

சல்மான் சற்று அதிரடியாக ரன்கள் சோ்த்தபோதும், மறுபுறம் ஆமிா் ஜமால் 7, ஷாஹீன் அஃப்ரிதி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26, அப்ராா் அகமது 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட, பாகிஸ்தான் ஆட்டம் 149 ஓவா்களில் 556 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

சல்மான் அகா 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 104 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 3, கஸ் அட்கின்சன், பிரைடன் காா்ஸ் ஆகியோா் தலா 2, கிறிஸ் வோக்ஸ், ஷோயப் பஷீா், ஜோ ரூட் ஆகியோா் தலா 1 என பந்துவீசிய அனைவருமே விக்கெட் எடுத்தனா்.

இங்கிலாந்து- 96/1: அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, செவ்வாய்க்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் சோ்த்திருந்தது. ஜாக் கிராலி 64, ஜோ ரூட் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, கேப்டன் ஆலி போப் டக் அவுட் ஆனாா்.

Thanks to Dinamani

icon
Vellore Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Vellore Ads

Copyrights © 2024 .   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.