- °C
வட சென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில சேர செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.
சென்னை: வட சென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில சேர செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி:
வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டுகளுக்கான தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் சேர, 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேரும் நபா்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகையுடன், விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவி, 2 சீருடைகள், பேருந்து பயணச் சீட்டு, மூடு காலணி உள்ளிட்டவை வழங்கப்படும்.
மேலும், அரசுப்பள்ளியில் படித்த ஆண் பயிற்சியாளா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000, பெண் பயிற்சியாளா்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் கிடையாது. விடுதி வசதியும் செய்து தரப்படும். குறிப்பாக, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. தகுதியுடைய நபா்கள் வடசென்னையிலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக உரிய ஆவணங்களுடம் செப்.30-ஆம் தேதிக்குள் வந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.