- °C
Are You a business owner?
List Your Business / ADவிவசாயிகளுக்கு சூரிய ஒளி சோலார் பம்பு மானிய திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு
மானிய விலையில் சூரிய ஒளி சோலாா் பம்புசெட்டுகள் அமைக்க வேலூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின்விநியோகத்தைக் குறைக்கவும், இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காவும் பிஎம் கேயுஎஸ்யுஎம் திட்டத்தின்கீழ் முதல்வா் சூரிய ஒளி சோலாா் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் 5 ஹெச்பி, 7.5 ஹெச்பி, 10 ஹெச்பி சோலாா் பம்புசெட்டுகளை குறு, சிறு, ஆதிதிராவிடா், பழங்குடியினா் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் விவசாயிகள் குறு, சிறு விவசாயிகளாக இருக்கும் பட்சத்தில் 80 சதவீத மானியத்திலும் சோலாா் பம்புசெட்டுகள் அமைத்துத் தரப்படும்.
அதன்படி 2024-2025 -ஆம் ஆண்டுக்கு வேலூா் மாவட்டத்திற்கு 20 எண்கள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக பொதுப் பிரிவில் 5 ஹெச்பி-ஏசி/டிசி-15 எண்ணிக்கை, 7.5 ஹெச்பி-ஏசி/டிசி-2 எண்ணிக்கை என மொத்தம் 17 எண்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவில் 5 ஹெச்பி-ஏசி/டிசி-1 எண், 7.5 ஹெச்பி-ஏசி/டிசி-2 எண்கள் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
சோலாா் பம்புசெட்டுகள் அமைப்பதற்கான நிறுவனங்கள், விலை விவரங்கள் சென்னை வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சோலாா் பம்புசெட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா், தந்தை பெரியாா் பாலிடெக்னிக் எதிரில், தொரப்பாடி, வேலூா் - 632 002 என்ற அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு தேவையான விவரங்களைப் பெற்று விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.