- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

வள்ளிமலையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு 10th Century Inscription Discover

Grow your business by getting relevant and verified leads
வள்ளிமலையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு 10th Century Inscription Discover

வள்ளிமலையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு 10th Century Inscription Discover

  May 17, 2024     News Paper

வேலூர்: வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கன்னரதேவனின் 2 கல்வெட்டுகள் பாதுகாப்பாக வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுவதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில், வள்ளிமலை கோயில் அருகில் சிதிலமடைந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த கல்வெட்டுகளில் கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரகூட மன்னன் கன்னரதேவனின் வெற்றியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு வெற்றியின் அறிகுறியைக் குறிக்கிறது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மொழிகளைக் கொண்ட முதல் கல்வெட்டு இது” இவ்வாறு கூறினர்.

இதனையடுத்து, கல்வெட்டை வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவின் பேரில், வேலூர் அரசு அருங்காட்சியர், காப்பாட்சியர் சரவணனிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த கல்வெட்டு பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றப்பட்டு, வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

மேலும், இந்த கல்வெட்டானது 2011ஆம் ஆண்டு வள்ளிமலை இடும்பன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்டு, அதை பாதுகாப்பதற்காக முருகன் சன்னதி அருகே அப்போதைய தொல்லியல் துறை அதிகாரிகள் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

icon
Vellore Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Vellore Ads

Copyrights © 2024 .   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.