- °C
Are You a business owner?
List Your Business / ADமுன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,257 கோடியாக உள்ளது.
இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 20.4 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.28,057 கோடியாக உள்ளது. இதுவும் முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தைவிட 6.6 சதவீதம் அதிகம். ஆனால், 2024 ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் 1.6 சதவீதம் குறைவு.
2024-24 நிதியாண்டு முழுமைக்குமான நிறுவனத்தின் வருவாய் வளா்ச்சி சுமாா் 3 முதல் 5 சதவீதம் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.